உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா-லக்னோ அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பேருந்து கவிழ்ந்த விபத்தில் 16 பேர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
45 பயணிகளுடன் டெல்லியில் இருந்து பீகாருக்கு சென்ற பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையிலேயே கவிழ்ந்தது. இதில் லேசான காயமடைந்த 29 பேருக்கு உள்ளூர் மருத்துவமனையில், முதலுதவி சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டடுள்ளனர்.
மேலும், படுகாயமடைந்த 16 பேர் எட்டவா பகுதியில் உள்ள சைபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.