செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

தேசியத் தேர்வு முகமை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Aug 19, 2020 07:30:58 PM

ரயில்வே, வங்கி, பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றின் பணிகளுக்குப் பொதுவான தகுதித் தேர்வு நடத்துவதற்காகத் தேசிய பணியாளர் தேர்வு முகமையை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, ரயில்வே, வங்கி, பணியாளர் தேர்வாணையம் ஆகிய மூன்று வகையான தேர்வு வாரியங்களுக்குப் பதில் பொதுவான தகுதித் தேர்வு நடத்த ஏதுவாகத் தேசிய பணியாளர் தேர்வு முகமையை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

பொதுத் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மூன்றாண்டுகளுக்குச் செல்லும் என்றும், மதிப்பெண்களை உயர்த்த ஒருவர் மீண்டும் தேர்வெழுதலாம் என்றும், உயர்ந்த மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மூன்று தேர்வு வாரியங்கள் ஒருங்கிணைக்கப்படுவதால் வேலைதேடுவோர் தனித்தனியாகத் தேர்வு எழுத வேண்டியதில்லை என்றும், இப்போது ஆங்கிலம், இந்தி ஆகிய இருமொழிகளிலேயே நடத்தப்படும் தேர்வுகள் இனி 12 மொழிகளில் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை வேலைதேடும் இளைஞர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் எனக் குறிப்பிட்டார். விடுதலைக்குப் பிந்தைய இந்திய வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க சீர்திருத்தம் என்றும், இதனால் தேர்வு, பணியமர்த்தம் ஆகியவை எளிமையாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் விமான நிலையங்களைத் தனியாருக்குக் குத்தகைக்கு விடுவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்தார். நடப்பு அரைவைப் பருவத்தில் கரும்புக்குக் குவிண்டாலுக்கு 285 ரூபாய் என விலை நிர்ணயிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.


Advertisement
அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..
கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட இருந்த 850 கிலோ குட்கா பறிமுதல் 8 பேர் கைது
பிப்ரவரி மாத தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும் தேதிகள்
எஸ்.பி.ஐ.வங்கி கிளையில் கேஸ் கட்டர் மூலம் வெட்டி 19 கிலோ தங்க நகைகள் கொள்ளை என தகவல்
இந்திய மீனவர்களை சிறைப்பிடித்துச் சென்ற பாகிஸ்தான் கடற்படையினர் - விரட்டிப் பிடித்த கடலோரக் காவல்படையின்..
ஆந்திரா அருகே தக்காளி லோடு ஏற்றி சென்ற லாரி தடுப்புச் சுவற்றில் மோதி விபத்து
போடோலாந்து மஹோத்சவ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
தேவ் தீபாவளியை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் முழுவதும் விழாக் கோலம்
மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல்... கடத்திச் செல்லப்பட்ட 3 பெண்கள், 3 குழந்தைகளைத் தேடும் பணி தீவிரம்
ஒடிசாவில் இருந்து கர்நாடகத்திற்கு 23 வன உயிரினங்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement