பொதுத்துறை நிறுவனங்கள் கடந்த 5 மாதங்களில் பிரதமரின் கொரோனா நிதியான பிஎம்-கேர்சுக்கு 2 ஆயிரத்து 105 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மொத்தம் 38 பொதுத்துறை நிறுவனங்கள் சேர்ந்து அளித்துள்ள இந்த நிதியில், ஓஎன்ஜிசி அதிகபட்சமாக 300 கோடி ரூபாய் அளித்துள்ளது.இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் 120 கோடியும், மின் உற்பத்தி நிதிக்கழகம் 200 கோடியும், ஊரக மின்மயமாக்கல் கழகம் 152 கோடியும் வழங்கின.
விமான நிலையங்கள் ஆணையம் 15 கோடி வழங்கிய நிலையில், லாபம் ஏதும் ஈட்டவில்லை என்பதால் பிஎஸ்என்எல் நன்கொடை எதுவும் வழங்கவில்லை.