மத்திய பிரதேசத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த குடும்பத்தார், கூட்டாக சேர்ந்து கொரோனா வார்டிலேயே குத்தாட்டம் போட்டு கொண்டாடியுள்ளனர்.
கட்னி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 19 பேருக்கு, கடந்த 8ம் தேதி நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, 10 நாட்களுக்கு பிறகான சிகிச்சையில் குடும்பத்தில் உள்ள அனைவரும் குணமடைந்துள்ளனர். இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, மறைந்த சுசாந்த் சிங்கின் "சிச்சோரே" படத்தின் பாடலை ஒலிக்கச் செய்து, குடும்பத்தில் உள்ள சிறுவர் முதல் பெரியவர் வரையிலான, 8 பேர் சேர்ந்து திரைப்பட பாணியில் உற்சாகமாக நடனமாடி அசத்தியுள்ளனர்.