பெங்களூரைச் சேர்ந்த 28 வயதான மருத்துவர் அப்துல் ரகுமான் என்பவர் சர்வதேச தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டதாக அவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து செய்தனர்.
காயம் அடைந்த தீவிரவாதிகளுக்கு ஆன்லைன் மூலமாக சிகிச்சையளிக்க அவர் செயலிகளைத் தயார் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பெங்களூர் ராமையா மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் அப்துல் ரகுமான் சிரியாவில் உள்ள மருத்துவ முகாம்களுக்கும் சென்று திரும்பியுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் டெல்லியில் தீவிராத ஆதரவுக்காக கைது செய்யப்பட்ட காஷ்மீரைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரிடமும் நடத்திய விசாரணையில் அப்துல் ரகுமானுக்கு தீவிரவாதிகளுடன் இருக்கும் தொடர்பு தெரிய வந்துள்ளது.