மத்திய பிரதேசத்தில் அரசு வேலை அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் வகையில் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் அரசு வேலைவாய்ப்பில் மத்திய பிரதேசத்தை சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என கூறி வந்த அவர், இப்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தமது மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதே போன்று வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 14 ல் இருந்து 27 சதவிகிதமாக உயர்த்தப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.