மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
கல்வித்துறையில் சீர்திருத்தம் ஏற்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன் ஒருபகுதியாக, மத்திய மனிதவள அமைச்சகத்தின் பெயரை, கல்வி அமைச்சகம் என மாற்ற முடிவு செய்யப்பட்டது.
இந்த முடிவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து, பெயர் மாற்ற அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.