பிரதமர் மோடி அறிவித்த டால்பின் பாதுகாப்புத் திட்டம் இன்னும் 15 நாட்களில் துவக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார்.
தமது சுதந்திர தின உரையில் கடல் மற்றும் நதிகளில் வசிக்கும் டால்பின்களை பாதுகாப்பது குறித்து பேசிய மோடி, இதனால் பல்லுயிர் பெருக்கம் பாதுகாக்கப்படுவதுடன், பலருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என குறிப்பிட்டார்.
சுற்றுலாவை வளர்க்கவும் இது உதவும் என மோடி நம்பிக்கை தெரிவித்தார். இந்த நிலையில் டுவிட்டரில் பிரதமரின் அறிவிப்பை ஒட்டி சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் டுவிட்டரில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கங்கை நதியில் உள்ள டால்பின்கள் கடந்த 2010 ல் தேசிய நீர்வாழ் உயிரினங்களாக அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.