புதுச்சேரி மக்கள் மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராக வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சுதந்திர தினத்தை முன்னிட்டு தியாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நல உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நாராயணசாமி, புதுச்சேரி மக்களின் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாத சூழ்நிலைக்கு அரசு தள்ளப்பட்டு இருப்பதாக வேதனை தெரிவித்தார்.