ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் கத்ரா நகரில், உள்ள புகழ் பெற்ற வைஷ்ணவி தேவி ஆலயம், கொரோனா ஊரடங்கால், 5 மாதங்களுக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இமய மலையில் அமைந்துள்ள இந்த குகை கோவிலில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 1,900 பேருக்கும், வெளி மாநிலங்களை சேர்ந்த 100 பேருக்கும், என நாளொன்றுக்கு 2000 பேருக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யுமாறு வலியுறுத்தப்படுவதுடன், கைபேசியில் ஆரோக்கிய சேது செயலியை நிறுவுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலங்களில் இருந்து வருவோர், கொரோனா பரிசோதனை சான்றிதழுடன் வருமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.