செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கர்நாடகாவுக்காக மாயமாகும் , கிருஷ்ணகிரி மலைகள்..! எம்.சாண்ட் மாஃபியா அட்டூழியம்

Aug 15, 2020 11:10:32 AM

கர்நாடகாவில் நடைபெறும் கட்டட பணிகளுக்காக, தமிழகத்தின் கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள மலைக் குன்றுகள் ஒவ்வொன்றாக உடைக்கப்பட்டு தினமும் பல ஆயிரம் டன் எம்.சாண்டாக கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் மலைகள் நிறைந்த பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 150 மலைக் குன்றுகள் உள்ளன. இவற்றில் 80 மலைக் குன்றுகள், கர்நாடக- தமிழக எல்லையான ஓசூரில் அமைந்துள்ளன.

தமிழகத்தில் இந்த மாவட்ட நிர்வாகம் மட்டுமே கனிமவளங்களை பாதுகாப்பதை விடுத்து, அதிக அளவில் மலைகளை உடைப்பதற்காக 112 கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கி உள்ளதாகவும், இதில் மோரண பள்ளி, சானமாவு, தொரப்பள்ளி அக்ரஹாரம், சீகாணபள்ளி, அழூர் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட வனப்பகுதிகளில் உள்ள பல மலைகள் கல்குவாரிக் கொள்ளையர்களால் மாயமாகிவிட்டதாக புகார் முன்வைக்கப்படுகின்றது.

எம்.சாண்ட் பயன்பாட்டுக்கு என மலைகளை உடைக்க அனுமதி பெற்றவர்களில் பெரும்பாலானோர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

உள்ளூர் பயன்பாட்டுக்கு, அதுவும் நாளொன்றுக்கு 500 லாரிகளுக்கு மட்டும் எம்.சாண்ட் ஏற்றிச்செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தினமும் மலைக் குன்றுகளை உடைத்து கற்களை ஜல்லிகளாகவும்,ஜல்லிகளை எம்.சாண்டாகவும் மாற்றி தினமும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய டாரஸ் லாரிகளில், ஓசூர் - அத்திப்பள்ளி வழியாக கர்நாடக மாநிலத்துக்கு பகிரங்கமாக கடத்தி வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

தமிழக தேவை தவிர வெளிமாநிலங்களுக்கு எம்.சாண்ட் ஏற்றிச்செல்லக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறி, மலைகளை அழிப்பதை கனிமவளத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இங்குள்ள ஒப்பந்ததாரர்கள் போட்டிபோட்டு செய்துவருவதாக ஆதாரத்துடன் குற்றஞ்சாட்டுகிறார் தமிழ்நாடு எம்.சாண்ட் மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் யுவராஜ்.

சட்ட விரோத எம்.சாண்ட் கடத்தலை தடுத்து நிறுத்துவதோடு, மலைக்குன்றுகளை அழிப்பதற்கு அனுமதி அளித்த சம்பந்தப்பட்ட கனிமவளத்துறை அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு இயற்கை வளங்களைக் காக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.


Advertisement
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement