இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான நட்புறவு, நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு உருவானது என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison) தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து அவர் வெளியிட்ட செய்தியில், இந்தியா, ஆஸ்திரேலியா நட்புறவானது வர்த்தகம் மற்றும் ராஜ்ஜீய விவகாரங்களுக்கு அப்பாற்பட்டது என்றும், அந்த நட்புறவு மிகவும் ஆழமானது என்றும், நம்பிக்கை மற்றும் மரியாதை அடிப்படையில் அது உருவானது என்றும் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் வாழும் புலம்பெயர்ந்தோரில் இந்தியர்களின் எண்ணிக்கையே மிகவும் அதிகம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், பூமியில் பன்முக கலாசார நாடாக ஆஸ்திரேலியா வெற்றிகரமாக திகழ இந்தியர்களின் பங்கும் முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.