மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் ஒன்றரை வயது பெண் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், மீட்கப்பட்டுள்ள உடல்களின் எண்ணிக்கை 56ஆக உயர்ந்துள்ளது.
கேரள மாநிலம் மூணாறு ராஜமலை அருகேயுள்ள பெட்டிமுடிப் பகுதியில் கடந்த 6-ம் தேதி இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 70 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். நேற்று சம்பவ இடத்தை பார்வையிட்ட முதலமைச்சர் பிணராயி விஜயன் நிலச்சரிவில் வீடிழந்தவர்களுக்கு பாதுகாப்பான இடத்தில் வீடுகள் கட்டித் தரப்படும் என்றார்.
இதுவரை அங்கு 55 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 8வது நாளாக இன்று நடைபெற்ற மீட்புப் பணியில் ஒன்றரை வயது பெண் குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. மீதமுள்ள 14 பேரின் உடல்களை மீட்குப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களில் 17 பேர் 6 மாத குழந்தை முதல் 15 வயது சிறுவர்கள் வரை என்பது குறிப்பிடத்தக்கது.