இந்திய விமானப் படையின் தலைமை தளபதி ஆர்கேஎஸ் பதாரியா, மிக் 21 பைசன் ரக விமானத்தில் பறந்து ஆய்வு செய்தார்.
இந்திய விமானப் படையின் மேற்குப் பிரிவு முன்களப் பகுதியை, தலைமை தளபதி ஆர்கேஎஸ் பதாரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விமானப் படை வீரர்களிடம் கலந்துரையாடியதுடன், மிக் 21 பைசன் ரக விமானத்திலும் அவர் பறந்தார். விமானப் படை தளத்தின் தயார் நிலை குறித்தும் பதாரியா ஆய்வு செய்தார். லடாக் எல்லை விவகாரத்தில் சீனாவுடன் மோதல் போக்கு நீடிக்கும் நிலையில், இந்திய விமானப் படையின் செயல்பாட்டு நிலையை எடுத்துக் காட்டும் விதத்தில் தளபதி பதாரியாவின் செயல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.