ஆக்ரமிப்பு காஷ்மீரில் மருத்துவக் கல்லூரிகள் வழங்கும் பட்டங்களை அங்கீகரிக்க இந்தியா மறுத்துள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்ட ஒரு பொது அறிவிப்பில், இத்தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர், லடாக், ஆக்ரமிப்பு காஷ்மீர் உள்பட அனைத்துப் பகுதிகளும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் தாம் என்றும் ஆக்ரமிப்பு காஷ்மீரில் இயங்கும் மருத்துவக் கல்லூரிகள் இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரத்தைப் பெறவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மருத்துவக் கல்லூரிகளில் படித்து பட்டம்பெறுவோருக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் வழங்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசு மாணவர்களின் கல்வி உதவித் தொகை திட்டத்தில் செய்த மாற்றத்துக்கு பதிலடியாக இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஆண்டுதோறும் 1600 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். இவ்வாறு ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு படிக்கச் செல்வோர், தீவிரவாத முகாம்களில் பயிற்சி பெற்று இந்தியாவுக்குள் ஊடுருவுவதாக புகார்கள் எழுந்தன.