நாட்டின் 109 வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்க பாம்பர்டியர், ஆல்ஸ்டோம் உள்ளிட்ட 23 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. பயணிகளுக்கான ரயில்சேவையில் வருமானம் குறைந்துள்ளதாகக் கூறி 151 தனியார் ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இத்திட்டத்திற்கு டெண்டர் விடுவதற்கு முன்னதான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், ரயில்களை இயக்க தனியார் நிறுவனங்கள் 12 தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ரயில்வேத்துறைக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு கிடைக்கும் என கூறப்படும் நிலையில், ஐஆர்சிடிசி, மேதா க்ரூப், பெல், பாரத் போர்ஜ், ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்களும் இதில் ஆர்வம் காட்டியுள்ளன.