புதுச்சேரியில் ஆகஸ்ட் 31 ம் தேதி வரை, ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளில் முழு ஊரடங்கு அமுலுக்கு வரும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேச பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் பெருகிவரும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், புதுச்சேரியில் ஏற்கனவே இருந்த கடைகள் திறப்பு காலை 5 மணி முதல் 9 மணிவரையை , நாளை முதல் காலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை திறந்திருக்க அனுமதி என்று மாற்றப்படுவதாக நாராயணசாமி குறிப்பிட்டார்.
அடுத்த வாரம் முதல் ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளில் முழு ஊரடங்கு அமுலுக்கு வரும் என்றும் அன்று எந்தவித தளர்வுகளும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.