நேர்மையாக வரி செலுத்துபவர்களை கவுரவிக்கும் வகையில்,வெளிப்படையான வரிவிதிப்பு- நேர்மையானவர்களை கவுரவித்தல்- என்ற புதிய வரித் திட்டத்தை பிரதமர் மோடி நாளை துவக்கி வைக்கிறார்.
நேரடி வரி விதிப்பு முறைகளை சீர்படுத்தும் முயற்சிகளின் ஒரு கட்டமாக இது துவக்கப்படுகிறது. வரி விகிதங்களை குறைத்து நேரடி வரி விதிப்பை எளிமைப்படுத்தும் வகையில் வரி சீர்திருத்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படுவதாக இது குறித்த செய்திக் குறிப்பில் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு கார்ப்பரேட் வரி 30 ல் இருந்து 22 சதவிகிதமாக குறைக்கப்பட்டதுடன், உற்பத்தித் துறைக்கு வரும் புதிய நிறுவனங்களுக்கு அது 15 சதவிகிதமாக மேலும் குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.