கர்நாடகா மாநிலத்தில் ஓடும் பேருந்தில் நேரிட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் உடல்கருகி பலியாகினர்.
விஜயபுராவில் இருந்து பெங்களூருக்கு 32 பயணிகளுடன் சென்ற குகேஸ்ரீ என்ற தனியார் பேருந்து, சித்ரதுர்கா மாவட்டம் ரங்கப்பன்ஹள்ளியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 3 மணியளவில் வந்தபோது தீ பிடித்தது.
சுதாரித்து கொண்ட ஓட்டுனரும், நடத்துனரும் கீழே இறங்கி பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து பயணிகளுக்கு தகவல் தெரியபடுத்தினர். இருப்பினும் விபத்தில் 2 குழந்தைகள், ஒரு பெண் உள்ளிட்ட 5 பேர் பலியாகினர்.
மேலும் சிலர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலின்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீயில் பேருந்து முழுவதும் எரிந்து உருக்குலைந்தது. என்ஜீனில் நேரிட்ட கோளாறே தீ பிடிக்க காரணம் என்று கூறப்படுகிறது.