சுமார் 8722 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை வாங்க, பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நடந்த இந்த கவுன்சிலின் கூட்டத்தில் வழங்கப்பட்ட இந்த ஒப்புதலின் அடிப்படையில், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து 106 அடிப்படை பயிற்சி விமானங்கள் வாங்கப்படும்.
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்திடம் இருந்து கடற்படை மற்றும் கடலோர காவற்படை கப்பல்களுக்கான சூப்பர் ரேபிட் கன் மவுண்டுகளை வாங்கவும் இந்த கூட்டத்திஙல் அனுமதி வழங்கப்பட்டது.
அதைப் போன்று 70 சதவிகிதம் உள்நாட்டு பொருட்கள் அடங்கிய நவீன வெடிமருந்து உபகரணங்களை வாங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது. ராணுவ கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் அளிக்கப்பட்ட ஒப்புதல், ராணுவ தளவாட உற்பத்தியில் சுயசார்பை எட்டுவதற்கான முதல் படியாக கருதப்படுகிறது.