கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.
கனமழையை தொடர்ந்து கடந்த 7ஆம் தேதி ராஜமலை என்ற பகுதியை சுற்றி நிலச்சரிவு ஏற்பட்டதில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பலர் மண்ணுக்குள் உயிருடன் புதைந்தனர்.
அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர். வனத்துறையினர் மற்றும் போலீசார் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.
தேடும் பணியில் இதுவரை 49 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்டன. காணாமல் போன மேலும் 19 பேரை டிரோன்கள் உதவியுடன் கண்டறிந்து மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
இதனிடையே குட்டநாடு, ஆலப்புழை, மூணார், தீக்கோய் ஆகிய இடங்களில் வெள்ளத்தில் காணாமல் போனவர்கள தேடும் பணியும் நடக்கிறது.