பயணிகள் ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவை, மறு உத்தரவு வரும் வரை ஓடாது என மத்திய அரசு திட்டவட்ட மாக அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா தாக்கம் தற்போது குறைந்து வருவதால், ரெயில் சேவை மீண்டும் துவங்க வாய்ப்பு உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் செய்தி வெளியாகி இருந்தது.
மீண்டும் ரயில் எப்போது ஓடும்? என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் சூழலில், மத்திய அரசு வெளியிட்டு உள்ள ஓர் அறிவிப்பில், பயணிகள் ரயில் மற்றும் புற நகர் ரயில்கள், தற்போது இயக்கப்படாது என உறுதிபடத் தெரிவித்துள்ளது.
அதேநேரம், 230 சிறப்பு ரெயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என அறிவித்துள்ளது. மும்பை மாநகரை ப் பொறுத்தவரை, மாநில அரசின் கோரிக்கையை ஏற்று, குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மட்டும் ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.