மகராஷ்டிரா மாநிலம் புனேவில் குளிர்சாதன பெட்டியின் தட்டை பயன்படுத்தி ஆன்லைனில் பாடம் எடுத்த ஆசிரியைக்கு இணையத்தளத்தில் பாராட்டுகள் குவிகிறது.
கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் வழி கற்பித்தலை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதற்கான போதிய வசதி இல்லாத ஆசிரியை ஒருவர், இரு டப்பாக்களுக்கு இடையே குளிர்சாதனப் பெட்டியின் கண்ணாடி தட்டை வைத்து அதற்கு மேல் செல்போனையும் கீழே பேப்பர்களையும் வைத்து பாடம் எடுக்கும் புகைப்படம் வைரலாகி உள்ளது.
செல்போனை கையில் பிடித்திருக்க வேண்டிய அவசியமின்றியும் மாணவர்கள் தெளிவாக பாடத்தை கவனிக்கும் வகையிலான இந்த கிரியேட்டிவ் ஐடியோ இணையத்தில் பலரை கவர்ந்தது.