வந்தே பாரத் மிஷன் நடவடிக்கையின்கீழ் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்பியிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சுற்றுலா, வணிகம் போன்ற காரணத்தினால் வெளிநாடு சென்ற இந்தியர்கள், சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தம் போன்றவற்றால் நாடு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர்.
அவர்களை கடந்த மே மாத தொடக்கத்தில் இருந்து வந்தே பாரத் மிஷன் நடவடிக்கையின்கீழ் ஏர் இந்தியா நிறுவன சிறப்பு விமானங்கள் மூலம் மத்திய அரசு திரும்ப அழைத்து வருகிறது.
இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வெளியிட்ட பதிவில், இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்பியிருப்பதாகவும், இந்தியாவிலிருந்து 13 லட்சம் பேர் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.