பாதுகாப்பு விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில், ஏர் ஏசியாவின் இரண்டு முக்கிய அதிகாரிகளை விமானப் போக்குவரத்து இயக்குநரகம் 3மாதங்களுக்கு சஸ்பென்ட் செய்துள்ளது.
எரிபொருள் செலவை குறைக்கும் நோக்கத்துடன் ஏர் ஏசியா நிறுவனம் சில பாதுகாப்பு விதிகளை மீறுவதாக அதன் விமானி கவுரவ் தனேஜா என்பவர் யூடியூப் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
விமான சேவையின் பாதுகாப்பு மற்றும் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் செயல்பாட்டிற்கு எதிராக குரல் கொடுத்ததால் தாம் சஸ்பென்ட் செய்யப்பட்டதாகவும் அவர் அதில் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் மீது விமானப்போக்குவரத்து இயக்குநரகம் கடந்த ஜூன் மாதம் விசாரணை நடத்தியது. அதன் முடிவில் ஏர் ஏசியா நிறுவன போக்குவரத்து பிரிவு தலைவர் மணீஷ் உப்பல், பாதுகாப்பு பிரிவு தலைவர் முகேஷ் நீமா ஆகியோர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.