விமானப்படையில் புதிதாக இணைந்துள்ள ரபேல் விமானங்கள் இமாச்சலப் பிரதேசத்தின் மலைப்பாங்கான பகுதிகளில் இரவு நேர பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
லடாக் பிரிவில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 1597 கிலோ மீட்டர் நீளமுள்ள கட்டுப்பாட்டு எல்லை உள்ளது. இந்த பகுதியில் பதற்றம் அதிகரித்தால், நிலைமையை சமாளிக்க உதவும் வகையில் ரபேல் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எதிரி விமானங்களை நோக்கி ஏவுகணைகளை வீசவும், விமானத்தில் இருந்து எதிரியின் ராணுவ தளங்கள் மீது ஏவுகணைகளை வீசவும் ரபேல் விமானங்களால் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 29 ஆம் தேதி இம்பாலா விமானப்படை தளத்திற்கு வந்து சேர்ந்த ரபேல் விமானங்களின் முதலாவது அணி முழுமையான ராணுவ செயல்பாட்டுக்கு வந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.