கொரோனாவால் சரிவை சந்தித்துள்ள பொருளாதாரத்தை மீட்க 3 வழிமுறைகளை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரைத்துள்ளார்.
பிபிசியுடன் நடத்திய ஆன்லைன் விவாதத்தில் அவர் இதைத் தெரிவித்துள்ளார். முதலாவதாக மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், வாங்கும் திறனை அதிகரிக்கவும் அரசு நேரடியாக பண உதவி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டாவதாக தொழிற்துறையினருக்கு அரசு உதவியுடன் கூடிய கடன் உத்தரவாத திட்டத்தை அளிக்க வேண்டும் என்றும், இறுதியாக வங்கி உள்ளிட்ட நிதித் துறைக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரத்தை வழங்க வேண்டும் எனவும் மன்மோகன் சிங் பரிந்துரைத்துள்ளார்.