கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான சொப்னா சுரேஷின் ஜாமின் மனுவை கொச்சி என்ஐஏ நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஜாமின் மனு மீது கடந்த நாட்களில் நடந்த விசாரணையில், சொப்னா மீது உபா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க இயலாது என்றும், வரி ஏய்ப்புக்காக மட்டுமே வழக்கு நடத்தலாம் எனவும் அவரது தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால் கேஸ் டயரி மற்றும் வலுவான ஆதாரங்களின் அடிப்படையில், உபா சட்டம் சுமத்தலாம் என என்ஐஏ-யின் வாதத்தை ஏற்று, நீதிபதி சொப்னாவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.
கேரள முதலமைச்சரின் முன்னாள் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கருடன் சொப்னாவுக்கு நெருக்கமான தொடர்பு உண்டு என்றும், முதலமைச்சரின் அறிமுகமும் அவருக்கு உண்டு என்றும் விசாரணையின் போது என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.