உலகம் முழுவதும் கொரோனா தொற்று நிலவரம் எப்படி மாறுகிறது என்பதை பொறுத்தே முழுமையான சர்வதேச விமான சேவைகள் துவக்கப்படும் என விமானப் போக்குவரத்து இயக்குநரக தலைவர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், பல நாடுகளில் குவாரன்டைன் நடைமுறைகள் தொடர்ந்து அமலில் இருப்பதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார். அதே நேரம் சில குறிப்பிட்ட மார்க்கங்களில் சிறப்பு சர்வதேச விமான சேவைகள் துவக்கப்படும் என கூறப்படுகிறது.
இதற்காக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்சுடன் இருதரப்பு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த நாடுகளுக்கு பயணம் செய்ய இந்தியர்களுக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற ஒப்பந்தங்களை சில அண்டைநாடுகளுடன் செய்துகொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருக்கிறார்.