ஒரு லட்சம் கோடி ரூபாய் வேளாண்மை அடிப்படை கட்டுமான வசதி நிதி திட்டத்தினை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
வேளாண்மை துறையில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதி திட்டத்தை நிறைவேற்ற மத்திய அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்து உள்ளது.
இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். அப்போது ‘பிரதமர்-விவசாயிகள் திட்டத்தின்’ கீழ் 6-வது தவணையாக எட்டரை கோடி விவசாயிகளுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கும் பணியையும் அவர் தொடங்கி வைப்பார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய வேளாண்மை துறை அமைச்சர் நரேந்திர தோமர் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.