மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்ற உலக நாடுகள் முன்வந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாகக் குறிப்பிட்டார்.
டெல்லியில் தேசியத் தூய்மை மையத்தில், தூய்மை இந்தியா திட்டம் குறித்த குறும்படத்தைப் பிரதமர் பார்த்ததுடன், அங்குள்ள பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டார். அதன்பின் பல மாநிலங்களில் இருந்து வந்திருந்த மாணவர்களிடையே உரையாற்றிய அவர், கொரோனாவைக் கட்டுப்படுத்த மாணவர்கள் சிறந்த பங்காற்றியதாகத் தெரிவித்தார்.
தூய்மையான இந்தியாவைக் கட்டமைப்பதற்காக அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தூய்மை இந்தியா திட்டத்தில் அரசுத் துறைகளுடன் பொதுமக்களும் இணைந்து அதை ஒரு புரட்சியாக மாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஒட்டுமொத்த உலகமும் மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்ற முன்வந்துள்ளதாகப் பெருமிதமாகக் குறிப்பிட்டார்.