கோழிக்கோடு விமான நிலையத்தில் விபத்து நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்த விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் என்றார்.
விமானத்தை இயக்கிய கேப்டன் தீபக் சேத் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் என்றும், கோழிக்கோடு விமான நிலையத்தில் அவர் 27 முறை விமானத்தை தரையிறக்கி இருப்பதாகவும் ஹர்தீப்சிங்புரி கூறினார்.
விமானி வேறு எங்கேனும் தரையிறக்குவதற்கு திட்டமிட்டிருந்தால், அதற்கு தேவையான அளவுக்கு விமானத்தில் எரிபொருள் இருந்ததாக அவர் குறிப்பிட்டார். விபத்து நேரிட்டதற்கு என்ன காரணம் என்பது விசாரணைக்குப் பிறகே துல்லியமாக தெரியவரும் என ஹர்தீப் சிங் புரி கூறினார்.
இதனிடையே, விபத்தில் காயமடைந்தவர்களை கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானும், முதலமைச்சர் பினரயி விஜயனும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கேரள அரசும் தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது.