கோழிக்கோட்டில் விமான விபத்து நேரிட்ட இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட இருப்பதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 18 பேர் பலியாகினர். விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, பிறகு தனிமைபடுத்தல் நடவடிக்கைக்கு பிறகே இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
ஆதலால் விபத்தில் சிக்கிய பயணிகள் வாயிலாக மீட்பு பணியில் ஈடுபட்டோர் மூலம் கொரோனா பரவாமல் இருக்க பரிசோதனை நடத்தப்பட இருப்பதாக அமைச்சர் சைலஜா அறிவித்துள்ளார்.
மீட்பு பணியில் ஈடுபட்டோரை சுயதனிமைபடுத்தி கொள்ளவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே விமான விபத்தில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.