செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

இரண்டாக பிளந்த விமானம்... விமானியின் முயற்சியால் பேரிழப்பு தவிர்ப்பு

Aug 08, 2020 11:52:32 AM

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியதில் 18 பேர் உயிரிழந்தனர்.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கோழிக்கோடு நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் போயிங் 737 ரகத்தை சேர்ந்த விமானம் புறப்பட்டு வந்தது. அந்த விமானத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 பணியாளர்கள், 2 விமானிகள் என மொத்தம் 191 பேர் இருந்தனர்.

கோழிக்கோடு விமான நிலையத்தில் இரவு 7.40 மணியளவில் அந்த விமானம் தரையிறங்கிய போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது ஓடு பாதையில் இருந்து சறுக்கிய விமானம் அருகில் இருந்த 30 அடி பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன.

ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில், விமானி, துணை விமானி உள்பட 18 பேர் உயிரிழந்தனர்.

120க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விமான விபத்து குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம், கேட்டறிந்த பிரதமர் மோடி, தேவையான உதவிகளை வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாக உறுதி அளித்தார்.

விபத்து தொடர்பாக இரங்கல் தெரிவித்து இருந்த விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, விமான விபத்து தொடர்பான விசாரணை பணியகம் விரிவான விசாரனையை மேற்கொள்ளும் என தெரிவித்து இருந்தார்.

அதைதொடர்ந்து, நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விபத்து தொடர்பாக, இரண்டு உயர்மட்ட விசாரணைக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதைதொடர்ந்து, விமான போக்குவரத்து அமைச்சகம், விமான போக்குவரத்து இயக்குனரகம், ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் விசாரணை அதிகாரிகள் இன்று காலை கோழிக்கோடு விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

டேபிள் டாப் முறையில் அமைந்துள்ள இந்த விமான நிலையத்தில் ஓடுபாதையை  தெளிவாக காண்பதற்காக,  சென்டர் லைட் முறையில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளது. ஆனால், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கிய 10வது ஓடுதளத்தில் இத்தகைய மின்விளக்குகள் இல்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், ஏற்பட்ட போதிய வெளிச்சமின்மை காரணமாகக் கூட விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனிடையே,விபத்தை தொடர்ந்து கோழிக்கோடு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு வரக்கூடிய அனைத்து விமானங்களும் கன்னூர் மற்றும் கொச்சின் சர்வதேச விமான நிலையங்களுக்கு மாற்றி விடப்பட்டு உள்ளது.

கோழிக்கோடு விபத்தில் சிக்கிய விமானத்தை கடைசிக்கட்டத்தில் இன்ஜீனை கேப்டன் தீபக் சாத்தே அணைத்துள்ளார். இதனால்,  விமானம் வேகம் குறைந்து ரன்வேயில் இழுத்து செல்லப்பட்டுள்ளது. விமானம் தீ பிடிக்காமல் தப்பியுள்ளது. தீ பிடித்தால் உயிரிழப்புகள் அதிகரித்திருக்கும். விமானியின்  சமயோஜித முயற்சியால் ஏராளமான உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன. 

 


Advertisement
அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..
கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட இருந்த 850 கிலோ குட்கா பறிமுதல் 8 பேர் கைது
பிப்ரவரி மாத தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும் தேதிகள்
எஸ்.பி.ஐ.வங்கி கிளையில் கேஸ் கட்டர் மூலம் வெட்டி 19 கிலோ தங்க நகைகள் கொள்ளை என தகவல்
இந்திய மீனவர்களை சிறைப்பிடித்துச் சென்ற பாகிஸ்தான் கடற்படையினர் - விரட்டிப் பிடித்த கடலோரக் காவல்படையின்..
ஆந்திரா அருகே தக்காளி லோடு ஏற்றி சென்ற லாரி தடுப்புச் சுவற்றில் மோதி விபத்து
போடோலாந்து மஹோத்சவ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
தேவ் தீபாவளியை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் முழுவதும் விழாக் கோலம்
மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல்... கடத்திச் செல்லப்பட்ட 3 பெண்கள், 3 குழந்தைகளைத் தேடும் பணி தீவிரம்
ஒடிசாவில் இருந்து கர்நாடகத்திற்கு 23 வன உயிரினங்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement