வேலைவாய்ப்பையும், உற்பத்தியையும் அதிகரிக்கும் அம்சங்கள் அடங்கிய புதிய தொழிற் கொள்கையை குஜராத் அரசு அறிவித்துள்ளது.
புதிய தொழிற்கொள்கையை அறிவித்த முதலமைச்சர் விஜய் ரூபானி, கொரோனா காரணமாக சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்கள் குஜராத்தில் தொழில் துவங்க முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த புதிய தொழிற்கொள்கையில் தொழிற்வளர்ச்சிக்காக ஆண்டு தோறும் 8000 கோடி ரூபாய் செலவழிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் அதிக எண்ணிக்கையில் தொழில் ஒப்பந்தங்கள் போடப்பட்ட மாநிலமாக குஜராத் உள்ளது. மூலதன மானியம், வரி தள்ளுபடி, மின்சார சலுகை, 50 ஆண்டுகளுக்கு சந்தை மதிப்பின் 6 சதவிகித விலையில் நிலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குஜராத்தின் புதிய தொழிற்கொள்கையில் இடம் பெற்றுள்ளன.