வோடஃபோன் ஐடியா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இழப்பு, ஜூன் மாதத்துடன் முடிந்த முதல் காலாண்டில், 25 ஆயிரத்து 460 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 4 ஆயிரத்து 874 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அந்நிறுவனம் கூறியிருந்தது. புதிய வருவாய்ப் பங்கீட்டு முறை அடிப்படையில் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய 19 ஆயிரத்து 440 கோடி ரூபாய் தொகையை கடன்பொறுப்பாக ஏற்றிருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும் முதல் காலாண்டில் வருவாய் 5.4 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 11 ஆயிரத்து 269 கோடி ரூபாய் ஆக இருந்தது. இந்த முறை 10,659 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாகவும் வோடஃபோன் ஐடியா தெரிவித்துள்ளது.