காஷ்மீர் பிரச்சனை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சனை என்றும் அதனைப் பற்றி சீனா அக்கறை கொள்ளத் தேவையில்லை என்றும் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அனுராக் ஸ்ரீவஸ்தவா, மற்ற நாடுகளின் உள் விவகாரங்கள் குறித்து சீனா எந்த கருத்தும் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
முன்னதாக பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வின்பின், காஷ்மீர் பகுதியில் நிலவி வரும் சூழ்நிலையை சீனா உன்னிப்பாக கவனித்து வருவதாக குறிப்பிட்டிருந்தார். இந்த பிரச்சினையில் இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.