20 லட்சம் ஸ்மார்ட் மீட்டர் தயாரித்து வழங்குவதற்காக, சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டெண்டரை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. சீனாவை தலைமையிடமாகக் கொண்டு இந்தோனேசியாவில் இயங்கி வரும் பிடி ஹெக்சிங் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட் மீட்டர் தயாரிக்க வேண்டும் என்ற நிபந்தனையை பூர்த்தி செய்யாததால், ஒப்பந்தத்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் எனர்ஜி எபிசியன்சி சர்வீசஸ் லிமிடட் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்குள் அனைத்து மின்சார மீட்டர்களையும், ஸ்மார்ட் பிரிபெய்டு மீட்டராக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. லடாக் எல்லையில் இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே நடந்த மோதலை தொடர்ந்து சீன நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.