தனது கொரோனா தடுப்பூசியான ZyCoV-D-ன் இரண்டாம் கட்ட கிளினிகல் சோதனை நாளை துவங்கும் என ஸைடஸ் கெடிலா மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 15 ஆம் தேதி துவங்கிய முதற் கட்ட சோதனையில் நல்ல பலன் கிடைத்துள்ளதை அடுத்து இரண்டாம் கட்ட சோதனையை துவக்குவதாக கெடிலா தெரிவித்துள்ளது.
முதற்கட்ட சோதனையில் தடுப்பூசி பாதுகாப்பானது என்றும் நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்கியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.விலங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா வைரசை அழிக்கும் திறன் வாய்ந்த ஆன்டிபாடீசுகள் உருவானதாகவும் கூறப்பட்டுள்ளது.