கொரோனோ சிகிச்சைக்கான ஆன்டிவைரல் மருந்தான ஃபேவிபிராவிரை, கோவிஹால்ட் (Covihalt) என்ற பெயரில் மருந்து நிறுவனமான லூபின் அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த மாத்திரையின் விலை 49 ரூபாய் என்றும் 10 மாத்திரைகள் அடங்கிய அட்டையாக விற்பனைக்கு வந்துள்ளதாகவும் லூபின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
லேசானது முதல் மிதமான அறிகுறிகள் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு ஃபேவிபிராவிர் மருந்தை அவசர சிகிச்சைக்காக அளிக்கலாம் என இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.