கொரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக 60 ஆயிரம் வென்டிலேட்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண், 60 ஆயிரம் வென்டிலேட்டர்களில் 96 சதவீதம், அதாவது 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள், மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டவை என்றும், பி.எம்.கேர் நிதியின்கீழ் 2 ஆயிரம் கோடி ரூபாயில் அவை தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
60 ஆயிரம் வென்டிலேட்டர்களில் 18 ஆயிரம் வென்டிலேட்டர்கள், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ஏற்கெனவே அளிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்த ராஜேஷ் பூஷண், டிராக் செய்ய வசதியாக அதில் ஜிபிஎஸ் சிப்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.