ரஷ்யாவில் மருத்துவப் படிப்பு படித்த தமிழகத்தைச் சேர்ந்த தொண்ணூற்றுக்கு மேற்பட்டோர் இந்தி நடிகர் சோனு சூட் உதவியுடன் மாஸ்கோவில் இருந்து சென்னைக்குத் தனி விமானத்தில் வந்து சேர்ந்தனர்.
ஜூலை மாதத்துக்குப் பின் இந்திய அரசின் சார்பில் மாஸ்கோவுக்குச் சிறப்பு விமானங்கள் இயக்கப்படவில்லை. இதனால் ரஷ்யாவின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் எம்பிபிஎஸ் படித்து வந்த தமிழக மாணவர்கள் தாய்நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.
இது குறித்து அறிந்த நடிகர் சோனு சூட் ஒரு தனி விமானத்தை ஏற்பாடு செய்து மாஸ்கோ சென்று மாணவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்தார். இந்த விமானம் மாஸ்கோவில் நேற்றுப் பிற்பகல் புறப்பட்டு இரவே சென்னைக்கு வந்து சேர்ந்தனர்.
இந்த விமானத்தில் பாதுகாப்பாகத் தாய்நாடு திரும்பிய தொண்ணூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் நடிகர் சோனு சூட்டுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.