மக்களுக்கு விரைவில் நீதி கிடைப்பதை அரசும், நீதித் துறையும் உறுதி செய்ய வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.
ஆந்திரா பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் சட்ட கல்லூரியின் 75-ஆம் ஆண்டு விழாவில் காணொலி மூலம் பேசிய அவர், ஏழை மக்களின் சட்டப் பிரச்னைகளை கடமையாக எடுத்து அதற்குத் தீர்வு காண வேண்டும் என்றார்.
அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் சட்டம் எளிமையாக, சிக்கல்கள் இல்லாத வகையில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய அவர், அதேநேரத்தில் சட்டத்தின் நோக்கமும், காரணமும் தெளிவாக இருக்க வேண்டும் என்றார்.