மெட்ரோ சேவைகளை துவக்குவது பற்றி இரண்டு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்துள்ள அவர், பயணிகளின் நெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், கட்டம் கட்டமாக, 50 சதவிகித பயணிகளுடன் மெட்ரோ சேவைகள் துவக்கப்படும் என்று கூறினார்.
பல நகரங்களிலும் மெட்ரோ சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், பெரும் வருமான இழப்பு, சாலைப் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். அனைத்து நகரங்களிலும் ஒரே சமயத்தில் மெட்ரோ சேவை துவக்கப்படும் என அவர் கூறினார்.
எனினும் இந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட உள்ள புதிய வழிமுறைகளின் அடிப்படையில், மெட்ரோ குறித்த இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.