அயோத்தியில் நடக்க உள்ள ராமர் கோவில் பூமி பூஜை, தேசிய ஒற்றுமைக்கான நிகழ்வாக இருக்கட்டும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஸ்ரீராமரின் கோட்பாடுகளும், ஆசிர்வாதமும் நாடு முழுமைக்கும் பரவவும், சகோதர உணர்வு மற்றும் கலாச்சார ஒருங்கிணைப்பு ஏற்படவும் பூமி பூஜை உதவட்டும் என அவர் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
எளிமை, வீரம், சுயகட்டுப்பாடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியன ஸ்ரீராமரின் குணங்கள் என குறிப்பிட்டுள்ள அவர், ராமர் எல்லோரிடமும் இருப்பதாகவும் கூறியுள்ளார்.