ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டின் இரண்டு மற்றும் இறுதி கட்ட சோதனைகளை நடத்த புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவுக்கு, இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார்.
இதை அடுத்து முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனையில் இருக்கும் பாரத் பயோடெக், கெடிலா நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு முன்னதாகவே கோவிஷீல்டின் இறுதிகட்ட சோதனை நடக்கும் என்பது உறுதியாகி உள்ளது.
இறுதிகட்ட சோதனைகளுக்குப் பின்னர், வளரும் நாடுகளின் தேவைக்காக இந்த தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்ய சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா முடிவு செய்துள்ளது. இந்தியாவில் 18 இடங்களில் சுமார் 1600 பேரிடம் இந்த தடுப்பூசியின் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட சோதனை நடத்தப்படும் என கூறப்படுகிறது.