ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு பெற உள்ளதை ஒட்டி, அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் ஸ்ரீநகரில் இன்றும் நாளையும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் பிரிக்கப்பட்டு நாளையுடன் ஓராண்டு நிறைவடைய உள்ளதால், போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி, முன்னெச்சரிக்கயாக ஸ்ரீநகரில் 2 நாட்களுக்கு மாவட்ட நிர்வாகம் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.