ஐதராபாத்தில் சில பெரிய மருத்துவமனைகள் லட்சக்கணக்கில் முன்பணம் பெற்றுக் கொண்டு, விஐபிகளுக்கும், செல்வந்தர்களுக்கும் படுக்கைகளை முன்பதிவு செய்வதாக வெளியான தகவல் குறித்து விசாரிக்க தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது.
தங்களுக்கு கொரோனா வந்தால் வசதியான மருத்துவமனைகளில் படுக்கை வேண்டும் என்பதற்காக பலர் நாளொன்றுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை கொடுத்து முன்பதிவு செய்வதாகவும், 4 பெரிய மருத்துவமனைகளுக்கு இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆபத்தான கட்டத்தில் இருக்கும் பல கொரோனா நோயாளிகள் கூட படுக்கை காலி இல்லை என மருத்துவமனைகளால் விரட்டப்படும் நிலையில், கடந்த ஒரு மாதமாக இந்த முறைகேடு நடந்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கியமாக சினிமா நடிகர்கள், நகைக்கடை உரிமையாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் இந்த மாதிரியான முன்பதிவை நடத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.