ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின் கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் மற்றும் 3 ஆம் கட்ட கிளினிகல் சோதனைகளை நடத்த புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவுக்கு தலைமை மருத்து கட்டுப்பாட்டாளரின் அனுமதி கிடைத்துள்ளது.
ஆஸ்ட்ராஜெனேகா நிறுவனத்துடன் சேர்ந்து உருவாக்கப்பட்டுள்ள Covishield என்ற பெயரிலான இந்த தடுப்பூசியின் முதற்கட்ட சோதனை முடிவுகள் கடந்த 20 ஆம் தேதி வெளியாகியின. அதன் முடிவுகள் நல்ல பலனை தருவதாக அமைந்துள்ளன எனவும், பாதுகாப்பான தடுப்பூசி என்பதுடன், கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியதாகவும் மருத்துவ இதழான தி லான்செட் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சுமார் 5000 பேரிடம் கிளினிகல் சோதனையை நடத்த திட்டமிட்டுள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்யவும் முடிவு செய்துள்ளது.