பாலிவுட் நடிகர் சுஷாந்தின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தனக்கு மிரட்டல்கள் வருவதாக அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.
சுஷாந்த் மரண விவகாரம் தொடர்பாக நாள் தோறும் புதிது புதிதாக, முரண்பட்ட தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. அந்தவகையில் பாந்த்ரா இல்லத்தில் சுஷாந்த் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ஜூன் 14ம் தேதியன்று, அவரது உடலை மருத்துவமனைக்கு எடுத்து சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தனக்கு வெளிநாட்டு செல்போன் எண்களில் இருந்து தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாக தெரிவித்துள்ளார்.
மும்பை போலீசார் தான் தன்னை நியமித்ததாகவும் அவர் கூறிய நிலையில், தூக்கில் தொங்கிய சுஷாந்தின் உடலை மும்பை போலீசாரே தான் கீழே இறக்கியதாக ஆம்புலன்சின் ஓட்டுனர் தெரிவித்துள்ளார்.